'யாருடா அது?!'
புன்னகைக்கிறேன் நான்
'குட்டி மாமா வந்துவிட்டான்'
நிறுத்தாமல் சிரிக்கிறாள்!

கைகளை நீட்டினேன் 
என்னை தூக்கி 
அள்ளிக்கொண்டாள் அவள்!

முத்தங்கள் தருகிறேன் 
என் உதட்டினை துடைக்கிறாள்!

மடியில் ஏந்திக்கொண்டேன் நான் 
தோள் தட்டி 
தாலாட்டுகிறாள் அவள்!

வாங்கி வந்த 
சாத்துக்குடியை 
'உரித்துக் கொடு மாமா'
என சப்புக்கொட்டியவளுக்கு 
ஞாபகம் வந்திருக்குமோ!
'என்ன வாங்கிக்கொண்டு வரவேண்டும் 
செல்லக்குட்டிக்கு?!'
என்று தொலைபேசியில் கேட்டதற்கு,
'யானை பொம்மை
என பதில் சொன்னது!

குனியச்சொல்லி 
முதுகில் ஏறுகிறாள் 
யானையின் மீது 
சவாரி செய்கிறேன் நான்!
                             -யோவ்   
                        www.kannam.com